பிக்பாஸின் ப்ரொமோ எப்பொழுது வெளியாகும்… என்று தெரியுமா? இதோ..!

செய்திகள்

கொரோனா பிரச்சினைக் காரணமாக சினிமா, சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 20 பேரை வைத்து படப்பிடிப்பு தொடங்கலாம் என்று அரசு அறிவித்தது.

ஆனால் குறித்த எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று ராதிகா, குஷ்பு மற்றும் தயாரிப்பாளர்கள் என கோரிக்கை வைத்ததை அடுத்து, தற்போது அரசு 60பேரை வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளது.

 

ஆனால் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோ 60 பேரை வைத்து நடத்த முடியாது என்று கூறியிருந்தது பிக்பாஸ் தரப்பு.

வழக்கமாக ஜுன் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தற்போது போட்டியாளரைக்கூட இன்னும் தெரிவு செய்யாமல் இருக்கின்றனர்.

இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவர் கமல் தான் என்று தகவல் வெளியானது.

தற்போது தெலுங்கில் ப்ரோமோ வந்துவிட்ட நிலையில், தமிழில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமாக தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் கமல் பிக்பாஸ் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாகவும், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ப்ரொமோ வெளியாகும் என்றும், அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.