பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் இந்த குழந்தை பிரபல நடிகரின் மகளா? யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க..!!

செய்திகள்

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் TRPல் இரண்டாம் இடத்தில் இந்த சீரியல் உள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்ய லட்சுமி என்ற பெயரில் ஒரு குட்டிப் பெண் நடிக்கிறார்.

அவர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவர் பிரபல சீரியல் நடிகரான ஷியாமின் இரண்டாவது மகள் தான் இவர்.

இந்த குட்டி குழந்தை இதற்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஷியாமின் முதல் மகள் இதற்கு முன் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்திருக்கிறார், தற்போது செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.