தமிழில் கமல்ஹாசன் கெளதமி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் பாபநாசம். இந்த படம் மலையாள படமாக த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் தான். சமீபத்தில் த்ரிஷ்யம் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைமில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
இந்த படத்தை தமிழில் எடுக்க இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தான் தமிழிலும் பாபநாசம் படத்தை இயக்கினார். ஆனால் இந்த படத்தை இப்போது இயக்குவது சி க்கலாகவே உள்ளது. அதற்கு காரணம் ஒன்றாக வாழ்ந்து வந்த கமல்ஹாசனும், கெளதமியும் நிஜ வாழ்க்கையில் பிரிந்து விட்டனர்.
இதனால் மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடிப்பது சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது. இதனையடுத்து கெளதமி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அனுக படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஜோதிகா கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அதே நேரம் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.இருந்த போதும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க ஜோ ஒத்துக்கொள்வாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இது ஒரு பக்கம் என்றால் கெளதமியே ஓகே சொல்லவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. சிம்பு, நயன்தாரா பிரேக் அப் ஆன பிறகும் ஒன்றாக இணைந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்திருந்தனர். அதே போல தொழில் வேறு சொந்த வாழ்க்கை வேறு என்று கருதினால் கெளதமியும், கமலும் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளது.