நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நாடோடிகள். வெளியாகி பலதரப்பட்ட நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட்டடித்த படம். அதில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை அனன்யா.
மேலும் இவர் இந்த படத்தில் ஒரு தீனிபண்டாரமாக வந்த அனன்யா பலரின் கவனத்தையும் கவர்ந்தார். இவரின் பூர்வீகம் கேரளாவாகும். அனன்யா 1987ஆம் ஆண்டு கொச்சின் கேரளாவில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் அயில்யா கோபால கிருஷ்ணன் நாயர்.
தனது தந்தையே திரைப்பட தயாரிப்பாளர் என்பதனால் இவருக்கு சினிமா வாய்ப்புகள் எளிதிலே கிடைத்து விட்டன. ஆனாலும் சிறு வயதிலேயே சினிமாவில் நடிப்பதனை தவிர்த்து வந்தார். அனன்யா கொச்சினில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ டிகிரி முடித்துள்ளார்.
மேலும் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் மற்ற விஷயத்திலும் செலுத்தியதால் இவர் கல்லூரி முடிக்கும் போதே ஒரு வில் வித்தை சாம்பியனாக பட்டம் பெற்றார். மேலும் பள்ளி காலம் முதலே இதனை கற்று வந்ததாக தெரிவித்திருந்தார்.
மேலும் தனது 20 வயதில் கல்லூரியில் வில்வித்தை போட்டியின் போது இவரை பார்த்த இயக்குனர் ஒருவர் இவரை நான் என் படத்தில் நடிக்க வைத்தே ஆகா வேண்டும். என்று அடம் பிடித்து நடிக்க வைத்தார். இதனால் 2008 ஆம் ஆண்டு, பாசிட்டிவ் என்ற மலையாள படத்தில் நடித்தார்.
இதற்கு முன்னர் 1995ஆம் ஆண்டு 8 வயதில் தன் அப்பாவின் தயாரிப்பில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அவர் மூலம் அனன்யாவிற்கு பல பட வாய்ப்புகள் அப்போதே வந்தது. பின்னர் 2009ஆம் ஆண்டு நாடோடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தான் அயில்யா என்ற பெயர் அனன்யா என மாற்றப்பட்டது.
மேலும் அந்த படத்திற்கு பின் அவர் தமிழில் சீடன், எங்கேயும் எப்போதும், அதிதி, என சில படங்களில் நடித்தார். நன்றாக பொய் கொண்டிருந்த வாழ்கையில் திருமணம் என்ற விஷயத்தில் கோட்டை விட்டுள்ளார் அனன்யா. இவருடைய முதல் திருமணம் என்பது ச ர்ச்சையான ஒரு பி ரச்சனையால் நிறுத்தப்பட்டது. குடும்பமாக சேர்ந்து ஒரு தொழிலதிபரின் மகனை அனான்யாவிர்க்கு பேசி முடித்து திருமணம் வரை சென்றுள்ளனர்.
திருச்சுரில் அந்த தொழில் அதிபருடன் இவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தின் போது தான் தெரிந்துள்ளது அந்த தொழில் அதிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது என்பது. ஷாக்கான குடும்பத்தார் க டுப்பாகி, அந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இப்படி ஒரு க சப்பான சம்பவத்திற்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார் அனன்யா. தற்போது டீவி ஷோக்களில் பங்கேற்று வருவதுடன் சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் அனன்யா.