பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து வெளியேறிய முக்கிய நபர்.. அவர் வெளியேற இப்படி ஒரு காரணமா? அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு தான். வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களை காட்டிலும் இந்த சின்னத்திரை தொடர்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இதன் காரணமாக பல வெள்ளித்திரை நடிகர் நடிகைகள் சின்னத்திரை பக்கம் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சின்னத்திரையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டு கொண்டு தொடர்களை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அணைத்தும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளதோடு பெருமளவில் பார்க்கபடுகிறது.

இப்படி இருக்கையில் இந்த சேனலில் பிரமாதமாக ஓடி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்க்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொடர் வீட்டில் இருக்கும் பெண்களை மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது.

நான்கு அண்ணன் தம்பிகளின் இடையே நடக்கும் பாசத்தை மையமாக வைத்து எடுக்கபடும் இந்த தொடரில் வரும் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்றுள்ளது. சொல்லப்போனால் இவர்களுக்குகாகவே இந்த தொடரை பார்ப்பவர்கள் ஏராளம்.

காரணம் இவர்களுக்கு இடையில் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் இதன் மூலமாகவே இதற்கு பல ரசிகர்கள் இந்த தொடரை பார்த்து வந்தனர். இதில் கதிராக குமரனும் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவும் நடித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சித்ரா எதிர்பாராதவிதமாக கா ல மானார். இது சின்னத்திரை வட்டாரங்களில் மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏ மாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் காவ்யா தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சித்ராவிற்கு  ஓரளவிற்கு இணையாக குமரனுக்கு ஜோடியாக  காவ்யா நடித்து வரும் நிலையில் ரசிகர்களுக்கு மீண்டும் பெரும் அ தி ர் ச் சி. நாம் யாரும் எதிர்பார்க்காத வகையில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனும் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இது கூறித்து அவரிடம் கேட்டபோது, நீங்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை அனுபவித்தீர்கள் என்று நம்புகிறேன். அதில் நான் என்னால் முடிந்த அளவிற்கு நன்றாக நடித்துள்ளேன் என நம்புகிறேன், வெற்றி அல்லது வெற்றி இல்லை என்பதை தாண்டி நான் இந்த தொடரில் நடித்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

அதே போன்று இதை பார்த்த நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நான் நம்புகிறேன். இந்நிலையில் இப்போது நாம் அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்துவோம் என கூறியிருந்தார். இது எது பற்றிய கருத்து என்று புரியவில்லை குமரன் வேறு தொடரில் நடிக்க போகிறரா இல்லை திரைப்படங்களில் நடிக்க உள்ளாரா இல்லை இனிமேல் நடிக்க மாட்டாரா போன்ற பல்வேறு விமர்சனங்களை அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.