பல ஆண்டுகளுக்கு முன் இப்படி பள்ளி சீருடையில் அமர்ந்திருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுதா? அட! அவரா இது?

செய்திகள்

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள அவரது பள்ளிகால புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

பாடகி டு நாயகி:

தமிழ் சினிமாவில் மிகவும் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன். இவர் ஒரு சினிமா நடிகை என்பதையும்விட, இவர் பிரபல நடிகர், உலக நாயகன் கமலஹாசனின் மகள் ஆவர். முதலில் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன்பின் சூர்யாவுக்கு ஜோடியாக ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார்.

முன்னணி நடிகை ஸ்ருதி ஹாசன்:

தற்போது பாடகி, நாயகி என பன்முக தன்மையுடன் விளங்கும் இவர் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார். சினிமாவையும் தாண்டி, எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.

பள்ளிப்பருவ புகைப்படம்:
அந்த வகையில் தற்போது ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. தனது பள்ளி பருவத்தில், ஸ்ருதி ஹாசன் அவரது தோழிகளுடன் பள்ளி சீருடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.