பப்ஜி கேம் விளையாட 16 லட்சத்தை செலவழித்த சிறுவன்.. எப்படி சாத்தியம்..!! இதனை அறிந்த தந்தை செய்த செயல் என்ன.!!

செய்திகள்

பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது சிறுவன் பப்ஜி கேம்-ஐ விளையாடி கொண்டிருந்தார். விளையாடுவதற்கு தன்னுடைய அம்மாவின் ஸ்மார்ட்போனை சிறுவன் பயன்ப்படுத்தி வந்தான். அந்த சிறுவன் அதிக நேரம் மொபைலில் விளையாடுவதை பார்த்து அவனது பெற்றோர் கேட்கும் போதெல்லாம் அவன் ஆன்லைனில் படிப்பதாக சொன்னான்.

மேலும் அந்த சிறுவன் பப்ஜி கேமில் அடுத்தடுத்த கட்டங்களை எட்டி அதுமட்டுமல்லாமல் புதிய அப்கிரேடுகளை செய்வதற்கு அந்த சிறுவன் அவனது பெற்றோரின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியுள்ளான்.

அந்த சிறுவன் இந்த கேமிற்காக ரூ.16 லட்சத்தை அவன் செலவழித்துள்ளான். மேலும் அவன் வங்கியில் இருந்து வரும் மெசெஜ்களை எல்லாம் அந்த பெற்றோருக்கு தெரியாமல் அழித்து விடுவான்.

அவனது பெற்றோர்கள் இந்த பணத்தை அந்த சிறுவனின் பின் எதிர்காலம் மற்றும் மருத்துவ உதவிக்காக அவர்கள் சேமித்து வைத்தனர். இந்த செய்தியை தெரிந்த இவனது தந்தை மிகவும் வேதனையாகவும், அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவனது தந்தை போலீசில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் இந்த பணத்தை மீட்க முடியாது என்று சிறுவனின் தந்தையிடம் கூறினார்கள்.

அதனை அடுத்து சிறுவனின் தந்தை அந்த சிறுவனை இருசக்கர வாகனங்கள் வேலை செய்யும் மெக்கானிக் கடையில் அந்த சிறுவனை வேலைக்காக சேர்த்து வந்தார்.