பட்டுசேலையை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா?.. பல ஆண்டுகள் அப்படியே வைத்திருக்க எழிய வழிகள்..!

செய்திகள்
பெண்களை பொறுத்தவையில் பெரும்பாலும் பெண்கள் கடைகளில் இருந்து பட்டுச்சேலையை வாங்கியதும் இது அசல் பட்டு சேலை தானா என்ற சந்தேகம் பலருக்கு உண்டாகும். மேலும் பட்டுசேலை தானா என்று கண்டுப்பிடிக்க ஒரு வழி உள்ளது. அதாவது சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்து பார்ப்பதால் அது அப்படியே நின்று எரியும். அது அப்படி எறிந்தால் அது உண்மையான பட்டு சேலை ஆகும்.
ஆனால் போலியான பட்டு சேலை என்பது அதிலிருக்கும் நூலை வெட்டி தீ வைக்கும்போது அதன் நூல் தலை முடி எரிவதை போல சுருங்கிக் கொண்டிருக்கும். மேலும் பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும். என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நவீன விசைத்தறிகள் மூலம் சேலை நெய்யப்படுதலின் எடை குறைவு. டிசைன்கள், அசல் பட்டு சேலையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கும்.
அதுமட்டுமின்றி பட்டுசேலையை மற்ற துணிகளை போல துவைத்துவிடக் கூடாது. அதற்கு தகுந்த அழுக்கு மற்றும் கரையை எடுக்கக் திரவங்கள் கிடைக்கின்றன. அதை மட்டுமே பட்டு சேலைக்கு பயன்படுத்த வேண்டும்.   மேலும் பட்டுசேலையை குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை வெயிலில் ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி மாதத்திற்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி மடித்து வைக்க வேண்டும்.மேலும் சிலர் பட்டு சேலையை அணிந்த பிறகு கழற்றி அப்படியே அதை மடித்து வைத்து விடுவார்கள். அப்படி செய்யக் கூடாது அது மிகவும் தவறான ஒன்று.
நாம் உடுத்தியத்தை அப்படியே வைப்பதால் உடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டிருக்கும். அதை காயவைத்து வைக்கும் போது எந்தவிதமான பாதிப்பும் வராது. மேலும் குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் மட்டுமே பல ஆண்டுகள் வரை பளபளப்பாக இருக்கும்.