padaiyappa meena

படையப்பா திரைப்படத்தில் மீனா நடித்தார் என்றால் நம்புவீர்களா.? பொய் இல்லை உண்மை தான்…இதை பாருங்கள் புரியும்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்களை மறக்கவே முடியாது. அப்படியான திரைப்படம் தான் படையப்பா , ரஜினிகாந்த் , செளந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் நடித்த இந்த திரைப்படம் இன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பானாலும் அமர்ந்து பார்ப்பது வழக்கம். இதில் மற்றவர்களின் நடிப்பை விட அதிகம் பேசப் பட்ட கதாபாத்திரம் என்றால் அது ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் தான்.

அன்றைய நாட்களில் ரஜினிகாந்திற்கு வில்லனாக ரகுவரன் தவிர மற்றவர்கள் நடிக்க தயங்குவார்கள். இதற்கு காரணம் ரசிகர்கள் எதிர்ப்பு தான். ஆனால் பெண்ணாக இருந்தும் துணிந்து குறித்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தற்போது இந்த திரைப்படம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடிக்க இருந்தது நக்மா தானாம். முதல் இரண்டு நாள் சூட்டின் பின் இந்த கதாபாத்திரம் மக்களிடம் கெட்ட பெயர் வாங்கி கொடுக்கும் என கூறி திரைப்படத்தில் இருந்து விலகினாராம். அதன் பின் நடிகை மீனாவை நடிக்க வைக்க முடிவு எடுத்தார்களாம்.

ஆனால் மீனாவிற்கு வில்லி கதாபாத்திரம் என்பது கொஞ்சம் கூட பொருந்தவில்லை எனவும் அவருக்கு அப்பாவி தனமான முகம் தான் அவருக்கு சரி எனவும் படக்குழு முடிவு செய்ததை தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப் பட்டாராம். ஆனால் ரம்யா கிருஷ்ணனை தவிர யார் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் பேசப் பட்டிருக்குமா என தெரியவில்லை என்கிறனர்..!