நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை ஒருபோதும் உண்ண கூடாது… அது என்னென்ன பழங்கள் தெரியுமா…? மீறி சாப்பிட்டால் என்னாகும்…?

உணவே மருந்து

உடல் ஆரோக்கியத்திற்கு நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடும்போது கவனமாக சாப்பிட வேண்டும். நம் உடலுக்கு பழங்கள் நல்லது என்றாலும் சில பழங்கள் நீரிழிவு நோயாளிக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பழமாகும்.

மேலும் நீரிழிவு நோயாளிகளின் உடலுக்கு பழங்கள் இரத்த சர்க்கரையின் அளவு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமுடன் இருக்க இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் சில பழங்களைத் தவிர்ப்பது நல்லது.

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்களை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

மாம்பழம்:

மாம்பழத்தில் 14 கிராம் சர்க்கரை உள்ளது. மாம்பாழ்த்தில் சர்க்கரை அதிகம் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது. இதை சாப்பிடுவதால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இவை சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும்.

சப்போட்டா:

மேலும் இந்த சப்போட்டா பழத்தில் அதிகளவு சர்க்கரை நிறைந்துள்ளது. ஒரு சப்போட்டா பழத்தில் 7 கிராம் சர்க்கரை உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு சப்போட்டா பழம் பெரும் தீங்கை ஏற்படுத்தும்.

திராட்சை:

திராட்சை பழத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி அதில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கிறது. இதன் காரணமாக திராட்சை பழத்தை நீரிழிவு தவிர்க்க வேண்டும்.

உலர்ந்த கொடி முந்திரி:

நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பழங்களில் உலர்ந்த கொடிமுந்தரியும் ஒன்றாக உள்ளது. கொடிமுந்தரியில் 24 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இப்பழம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

சீத்தாப்பழம்:

சீதாப்பழத்தில் 23 கிராம் வரை கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இந்நோயாளிகள் சீதாப்பழத்தை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

தர்பூசணி:

தர்பூசணியில் நார்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. மேலும் நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை மிகக் குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.

பப்பாளி:

சர்க்கரை நோயாளிகள் பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வதால் அவை இரத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். மேலும் இந்த பழத்தை குறைந்த அளவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு மிக நல்லது.