நீண்டநாள் காதலியை மணம் முடித்த கும்கி அஸ்வின் !! பொண்ணு சினிமா ஹீரோயின் மாதிரி இருக்கே !! வைரலாகும் திருமண புகைப்படங்கள் இதோ !!

செய்திகள்

தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் அஸ்வின் ராஜ். இவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் வி.சுவாமிநாதனின் மகன் ஆவார். கடந்த 2010-ம் ஆண்டு சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

“கும்கி” படத்தில் தம்பி ராமையாவுடன் இவர் செய்யும் குத்தல் காமெடி காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. மேலும், எத்தன், வந்தான் வென்றான், முப்பொழுதும் உன் கற்பனைகள் உட்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளா. கடைசியாக தனசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் கும்கி அஸ்வின், வித்யாஸ்ரீ என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். வித்யாஸ்ரீ அமெரிக்காவில் எம்எஸ் படித்து முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது என்ற செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று இவர்களது திருமணம் இருவீட்டார் முன்னிலையில் சிறப்பாக நடந்துள்ளது. தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக இரு வீட்டாரின் தரப்பில் 20 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.