நி த்தியானந்தாவிடம் அ னுமதி கே ட்டு கடிதம் எழுதிய ஹோட்டல் அதிபர் சி க்கலில் சி க்கினார்.! அ திர வைக்கும் காரணம்..!!

செய்திகள்

தமிழகத்தில் தொடங்கி, இந்தியா முழுவதும் ச ர்ச்சைகளில் சி க்கி பிரபலமான நித்தியானந்தா மீது பல வ ழக்குகள் இருக்கிறது. இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் தனக்கான பக்தர்கள், பக்தைகளை கொண்டுள்ள நித்தி, இப்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

ஆனால், தான் கைலாஸா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக ப ரப ரப்பை கிளப்பினார், இதற்கிடையே கைலாஸாவிற்கென புதிய தங்க நாணயங்களை விநாயர் சதுர்த்தி தினத்தன்று நித்தியானந்தம் அறிமுகம் செய்து வைத்தார் இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கிடையே, மதுரை ஓட்டல் அதிபர் ஒருவர் கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க அனுமதி வேண்டி கடிதம் ஒன்றை நித்தியானந்தாவிற்கு எழுதினார்.

இந்த கடிதத்தை பார்த்த நித்தியானந்த, ஓட்டல் அதிபருக்கு பதில் அளித்தார். கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தி தெரிவித்தார். உடம்பில் ஓடும் ர த்தம், உ யிரில் இருக்கிற தைரியம் இவை எல்லாம், இந்த மூன்று ஊர் மக்கள் போட்ட பி ச்சை என நித்தியானந்தா கூறியிருந்தார்.

இந்தநிலையில், உணவகம் தொடங்க நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதிய டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் மீது ந டவடிக்கை எ டுக்கக் கோரி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பு கார் அளித்துள்ளார்.

அந்த பு காரில், நித்தியானந்தாவை நல்லவர் போல் காட்டும் முயற்சியில் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் ஈடுபடுவதாகவும், அ ரசால் தேட ப்படும் கு ற்றவாளிக்கு ஆதரவு தருவதாக கூறி டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் முத்துக்குமார் அளித்த பு கார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் சி க்கலில் சி க்குவாரா அல்லது த ப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.