நாம் வசிக்கும் வீட்டில் எப்போதும் லட்சுமி க டாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என நினைப்போம்… ஆனால் இந்த அறிகுறிகள் உங்கள் வீட்டில் தெரிந்தால் தெய்வம் இல்லை என்று அர்த்தம்…!!

Uncategorized

ஆன்மீக சம்மந்தமாக நம் வசிக்கும் வீட்டில் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் உள்ளது. அதே போல் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இல்லை என்று நாம் அறிந்துக் கொள்ளலாம்.

தெய்வம் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்:

நம் வீடு இருள் சூழ்ந்த நிலையில் போல் காட்சி அளிக்கும். உங்கள் மனதில் தினமும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டுமா என்ற எண்ணம் ஏற்படும்.

அதுமட்டுமின்றி நம் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்களை நாம் எவ்வளவுதான் சுத்தமாக கழுவி வைத்துக் கொண்டாலும் இரண்டு நாட்களில் அவை மங்களாக தோற்றம் அளிக்கிறது.

மேலும் நாம் உண்ணும் உணவு பொருட்கள் அதிகமாக வீணாவதன் காரணமாக தெய்வீக தன்மை இல்லை என்று உணர்த்தலாம். அதுமட்டுமின்றி தண்ணீர் குழாய் மற்றும் மின்சார பொருட்கள் பழுதடைகிறது.

தெய்வம் இருக்கு என்பதை உணர்த்தும் அறிகுறிகள்:

நம் வீட்டில் தெய்வம் இருக்கு என்பதை உணர்த்த விபூதி, எலுமிச்சை, வேப்பிலை, பூக்கள் போன்ற நறுமணங்கள் நம் வீட்டை சுற்றி நறுமணம் வீசும்.

மேலும் பூஜைக்கு பயன்ப்படுத்திய எலுமிச்சைப்பழம் காய்ந்து போகலாம். மேலும் நாம் கடவுளுக்கு வைத்து படைக்கும் மஞ்சள், குங்குமம் ஒரு வாரம் ஆனாலும் அப்படியே பொலிவாக இருக்கும்.

பெண்கள் ஆன்மீகத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

பெண்கள் கோலம் போடும் பொழுது தெற்கு திசையை பார்த்தபடி கோலம் போடக் கூடாது. மேலும் திருமணமான பெண்கள் ஒரு விரலில் மட்டும் தான் மெட்டி அணிய வேண்டும். இரண்டு, மூன்று விரல்களில் மெட்டி அணியக் கூடாது.

கர்ப்பிணி பெண்கள் உ க்ரமான தெய்வங்கள் உள்ள கோவில்களுக்கு செல்லக் கூடாது. மேலும் பெண்கள் குங்குமம் வைக்கும் போது கிழக்கு திசை பார்த்தபடி வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் அமாவாசை, தே வஷம் ஆகிய நாட்களில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. திருமணமான பெண்கள் மஞ்சள் கயிற்றில் மட்டும் மாங்கல்யத்தை கோர்த்து அணிய வேண்டும்.

பெண்கள் கோவில்களில் கொடுக்கும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. பெண்கள் தலைக்கு குளிக்கும் போது சிறிது மஞ்சளை முகத்தில் பூசி குளிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் பாகற்காயை வீட்டில் சமைக்கக்கூடாது. அப்படி செவதால் நமக்கு பாவம் வந்து சேரும்.