நான் ம றைந்தாலும் என் பாடல்கள் மூலம் வாழ்வேன் என்று கூறிய எஸ்பிபி ம றைந்தார்..!!மருத்துவமனை முன் கு விக்கப்பட்டுள்ள போலீசார்! மருத்துவமனைக்கு வி ரைந்த குடும்பத்தினர்…!!

செய்திகள்

கொரோனா தொ ற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் அவரது உடல்நிலை சீராக இருந்தபோதிலும் கடந்த மாதம் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோ சமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மேலும் மோ சமடைந்த நிலையில் அவருக்கு உயிர்காக்கும் அதிநவீன எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்பி சரண் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தது.

மேலும் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கை பெரும் சோ கத்தை ஏற்படுத்தியது. கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோ சமடைந்து வருவதாகவும், எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மிகவும் க வலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் குணமடையவேண்டும் என அவரது ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் உட்பட பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பெரும் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர்.

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பான தகவல் வெளிவந்ததும் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு பிரபலங்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் மருத்துவனை முற்றிலும் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. சினிமா பிரபலங்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். எஸ்.பி.பி அவர்களின் மகள், மகன், மனைவி உள்ளிட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனையில் ஏரளமான மக்கள் கூட்டங்கள் இருப்பதால் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இ றுதியில் அவர் உயிர் பி ரிந்தது.அனைவரும் இ ரங்கல் தெரிவிப்போம்.அவர் ம றைந்தாலும் கோடிக்கணக்கான பாடல்கள் மூலம் எப்போதும் நம்முடன் வாழ்வார்.