விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மாப்பிள்ளை சீரியலில்மிர்ச்சி செந்தில் ஸ்ரீ்ஜா வுடன் இணைந்து ஒரு நான்கு சகோதரிகள் நடித்திருப்பார்கள்.. அதில் முதலில் ரம்யா… அவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியலில் நடித்து வந்தார்.
மேலும் அதன் பின் ஜனனி.. அவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன் செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதில் கடைக்குட்டி தங்கச்சியாக நடித்திருந்தவர் தான் நம் வைஷாலி தனிகா இவர் ராஜா ராணி சீசன் 1 -ல் நடித்துள்ளார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அது போக முன்னனி நடிகரான விஜய் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது இன்ஸ்டாகிராம் மூலம் அவர்களின் ரசிகர்களுக்கு பதிலளித்து வந்துள்ளார்.
அதில் ஒரு ரசிகர் உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்று கேள்வி கேட்டுள்ளார்.. அதற்கு.. எனக்கு தளபதி விஜய் தான் பிடிக்கும் என்றும்… சூர்யாவும் பிடிக்கும்.. ஆனால் இதுவரை அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறியிருக்கிறார்.
அதன் பின் உங்களுக்கு பிடித்த கலர்என்ன என்று கேட்க.. தனக்கு ரோஸ் நிறம் பிடிக்கும் என்றும், எனக்கு பாஸிட்டிவ் ரோலில் நடிக்கத்தான் ஆசை ஆனால் நெகட்டிவ் ரோலில் நிறைய ஸ்கோப் உள்ளது. என்றும் கூறியுள்ளார் அதுபோக மகராசி சீரியலில் எப்போது வருவீர்கள் என்ற கேள்விக்கும் பதிலளித்த அவரிடம்
நீங்க சிங்கிளா என ஒரு ரசிகர் கேட்க அதற்கு அவரோஇல்ல இல்ல நான் கமிட்டட் என தன் வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.. அதன் பின் கல்யாணம் எப்போது என்ற கேள்விக்கு
நல்ல கேள்வி ஆனா எனக்கும் அதுக்கு சரியா ஆன்சர் தெரியல பட் இந்த கொ ரோனா எல்லாம் முடியட்டும் அப்புறமா கண்டிப்பா கல்யாணம் தான் என சொல்லியிருக்கிறார்.