நாட்டாமை படத்தில் நடித்த பெண்ணா இது!! பார்த்தா நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!!

செய்திகள்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 90ஸ் காலகட்டத்தில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம் தான் நாட்டாமை. ஆம் விஜயகுமார், சரத்குமார், குஷ்பூ, மீனா, கௌண்டமணி, செந்தில் என திரையுலக பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள்.

இப்படத்தில் ஒரு முக்கிய நகைச்சுவை காட்சியில் கௌண்டமணி பெண் பார்க்க சென்றிருப்பார். அப்போது அந்த காட்சியில் ஒரு இளம் பெண் நடித்திருப்பார். இவர் நாட்டாமை படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து ரஜினி நடித்து வெளியான லிங்கா படத்தில் நடித்திருந்தார்.

 

 

இவரின் பெயர் கீர்த்தி நாயுடு, ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர் வளந்ததெல்லாம் சென்னை தானாம். இவர் பிரபலமானது நாட்டாமை படத்தின் மூலமாக இருக்கலாம்.ஆனால் இந்து , சேதுபதி ஐ.பி.எஸ் , நம்ம அண்ணாச்சி, மே மாதம் என்று பல படங்களில் நடித்து உள்ளார்.

மேலும் தெலுங்கு மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளும் கூட நடித்துள்ளாராம். இந்நிலையில் முதன் முறையாக தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி நாயுடு.