நாட்டாமை படத்தில் நடிகை குஷ்புவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகை இவர் தான்.. இவங்களும் பெரிய நடிகை தான்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவைப் பொருத்த வரை கே எஸ் ரவிகுமார் என்ற பெயர் மிகப் பிரபலமாக ஆரம்பித்தது நாட்டாமை படத்திற்கு பிறகு தான். அதற்கு முன்பு நான்கு படங்கள் பண்ணியிருந்தாலும் நாட்டாமை படம் அவருக்கு பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத வசூல் சாதனைகளை குவித்த திரைப்படங்களில் நாட்டாமை படம் முக்கிய இடத்தைப் பெறும். சரத்குமார் இரட்டை வேடங்களில் அசத்தியிருப்பார். இந்த படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நாட்டாமை படம் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. நாட்டாமை படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவரும் நடித்திருப்பார்கள்.

இதில் குஷ்பு கதாபாத்திரத்திற்கு முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டவர் நடிகை லட்சுமி தானாம். லட்சுமி பழங்காலத்து நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரும் நடிப்பில் ஓன்றும் ஏப்பை சாப்பை கிடையாது.

எப்பேர்ப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் தூ க்கி சாப்பிட்டு விடுவார். அப்படிப்பட்ட லட்சுமியிடம் கதை சொல்லச் சென்ற இடத்தில் தான் எதேர்ச்சையாக குஷ்புவை சந்தித்தாராம் கேஎஸ் ரவிக்குமார்.

அப்போது குஷ்பு அந்த கதாபாத்திரத்தை பற்றி கேட்க கேஎஸ் ரவிக்குமார் சொன்னவுடன் அந்த கதாபாத்திரம் பிடித்துப் போய் உடனடியாக நானே நடிக்கிறேன் என ஒத்துக் கொண்டாராம். அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் கொட்ட பாக்கு கொழுந்து வெத்தலை குஷ்புவை மறந்து விடுவார்களா என்ன.