நவம்பர் மாதத்தில் 5 ராசியை குறி வைத்த குரு! ஆட்டிப்படைக்கும் சனியின் விபரீத மாற்றம்…. யாரு யாருக்கு என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறதோ?

ஆன்மிகம்

நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தில் பாதி நாட்களும் கார்த்திகை மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார்.துலாம் ராசியில் நீச்சம் பெற்ற நிலையிலும் விருச்சிக ராசியில் பாதி நாட்கள் கேது உடன் இணைந்தும் சூரியன் சஞ்சரிக்கிறார். கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியை பார்த்தால் குரு தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்க, செவ்வாய் மீனம் ராசியில் வக்ர நிலையில் இருந்து நேர்கதிக்கு மாறுகிறார். ரிஷபத்தில் ராகு விருச்சிகத்தில் கேது சஞ்சரிக்கின்றனர்.சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைந்திருக்கிறார் மாத பிற்பகுதியில் துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். புதன் துலாம் ராசியிலும் மாத பிற்பகுதியில் விருச்சிகம் ராசிக்கும் மாறுகிறார்.இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் நவம்பர் மாதத்தில் விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிகம்

செவ்வாய் ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே. உங்களுக்கு இந்த மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தின்படி பொருளாதார ரீதியாக சில பிரச்சினைகள் வரலாம். பெரிய அளவில் முதலீடுகளை தவிர்க்கவும். பெரிய அளவில் பணம் கடன் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம். குருவின் பார்வையால் உங்களுக்கு சில நன்மைகள் நடைபெறும். சுக்கிரன் 12ஆம் வீட்டில் நீச்சமடைகிறார். சூரியன் 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சனி பகவானின் சஞ்சாரத்தினால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல் வலிமை, மன வலிமை அதிகரிக்கும். அதிக சகிப்புத்தன்மையும் பொறுமையும் தேவை. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை உற்சாகமாக செய்வீர்கள். இந்த மாதம் புதிய வேலைகளை மாற்ற நினைக்க வேண்டாம். இருக்கிற வேலையில் கவனம் தேவை. நெருக்கடியான கால கட்டம் நீங்கும்.

தனுசு
தனுசு

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்களுக்குச் நவ கிரகங்கள் சாதகமாக உள்ளது. சனி குரு சேர்க்கை வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானம் தேவை. திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான வண்டி வாகனம் வாங்குவீர்கள். நல்ல வருமானம் வரும். உங்களின் நெருக்கடிகள் நீங்கும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வேலையில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சொத்து சேர்க்கை ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வேலை மாற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு , இது சரியான நேரம். மாணவர்களுக்கு நல்ல நேரம், உயர்கல்விக்காக முயற்சி செய்யலாம். கஷ்டங்கள் கவலைகள் நீங்கும் காலமாக அமைந்துள்ளது. பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

மகரம்
மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் நன்மைகள் அதிகம் நடைபெறும். சூரியன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் நீசம் பெற்றிருக்கிறார் வேலையில் மாற்றம் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். ஏழரை சனியால் சோதனைகள் வரலாம் அதே நேரத்தில் வேதனைகள் வர வாய்ப்பு இல்லை. ஜென்ம சனியால் பாதிப்பு வர வாய்ப்பு இல்லை. குருவின் பார்வையால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். சனி குரு சேர்க்கையால் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள கேதுவினால் திடீர் லாபத்தை கொடுக்கும். புதன், சுக்கிரன் பரிவர்த்தனையால் யோகம் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் லாபம் கிடைக்கும். மாத பிற்பகுதியில் புதிய வேலைக்கு முயற்சி பண்ணலாம். குரு பார்வையால் திருமண யோகம் தேடி வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். ரியல் எஸ்டேட் செய்பவர்கள் வளர்ச்சி அடைவார்கள். சொத்து பாகப்பிரிவினையால் பேச்சுவார்த்தை சுபமாக முடியும். எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யவும். பேச்சில் நிதானம் தேவை. பெற்றோர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன நெருக்கடிகள் நீங்கும்.

கும்பம்
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் சனிபகவான் நிறைய விரையங்களை கொடுப்பார். வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு செலவுகள் அதிகமாகும். திடீர் செலவுகள் அதிகம் நடைபெறும். குருவின் நகர்வும் செலவுகளை அதிகம் தருவார். உங்களின் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். நிறைய தான தர்மங்கள் செய்வது நல்லது. சுக ஸ்தான அதிபதி சுக்கிரன் எட்டாம் வீட்டில் நீசமடைவதால் பெற்றோரின் ஆரோக்கியத்திலும் குறிப்பாக அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சொத்துக்கள் வாங்கலாம். தொழில், வேலை, வருமானத்தில் மிக கவனமாக இருப்பது நல்லது. அகலக்கால் வைக்க வேண்டாம். மன குழப்பமாக இருக்கிறதே என்று நினைப்பீர்கள். எதையும் நிறுத்தி நிதானமாக யோசித்து முடிவு செய்வது நல்லது. திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. கோபம், வேகத்தை கட்டுப்படுத்துங்கள் நிதானமும் பயணங்களில் கவனமும் தேவை.

மீனம்
மீனம்

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களுக்கு இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சூரியன் எட்டாம் வீட்டில் நீசமடைந்து மறைந்திருக்கிறார். சுபமான செய்திகள் தேடி வரும். செய் தொழில் லாபத்தை கொடுக்கும். திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொடுக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். சொந்த பந்தங்கள் இடையே நெருக்கம் கூடும். எதிர்பார்க்காத வெற்றிகள் தேடி வரும். பதவியில் உயர்வு இடமாற்றம், சம்பள உயர்வும் தேடி வரும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும். நீசமடைந்த சுக்கிரனால் அதிக பாதிப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகத்தை கொடுக்கும். மாத பிற்பகுதியில் சூரியன், சுக்கிரன் இடமாற்றத்தினால் உயர்வும், முன்னேற்றமும் ஏற்படும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் மாதமாக அமைந்துள்ளது.