நல்ல உத்தியோகம் கிடைக்க, தொழிலில் மேன்மை ஏற்பட…!கணவன் மனைவி ஒற்றுமைக்கு தட்சிணாமூர்த்தி மந்திரம்…!!

ஆன்மிகம்

நமக்கு வியாழக்கிழமை என்றாலே நினைவுக்கு வரும் தெய்வம் குரு தட்சிணாமூர்த்தி. குருவின் அம்சமாகத் திகழும் அற்புதத் தெய்வம். ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிவனின் வடிவங்களில் ஒன்று என்கின்றன. சிவனாரின் வடிவமான தட்சிணாமூர்த்தி தென் முகக் கடவுள் என்பதால் தெற்குப் பார்த்த நிலையில் இருப்பதால் தான் அவரின் திருநாமம்  தட்சிணாமூர்த்தி என்று அமைந்ததாக சிவபுராணம் கூறுகிறது..

மேலும் முனிவர்களுக்கு மரத்தடியில் கல்லால் அமர்ந்த படி சிவபெருமானே  தட்சிணாமூர்த்தி அம்சத்தில் வந்து உபதேசித்துள்ளார். இதன் காரணமாக ஞானமும், யோகமும் வேண்டுவோர் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும் என்று ஆச்சார்யர்கள் அறிவுறுத்தப்பட்டன.

குரு ஸ்தானத்தில் குரு தட்சிணாமூர்த்தியே காட்சி தருவதால் சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளாக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்குவதால் புத்தியில் தெளிவும் செயலில் திண்மையும் கிடைக்கும் என ஐதீகம் கூறுகிறது.

ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ

இவை ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்குரிய மூலமந்திரம். மேலும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலையில் பாராயணம் செய்வது மிகவும் விசேஷம். இப்படி செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும்.

மேலும் வியாழக்கிழமைகளிலும் பௌர்ணமி தினங்களிலும் சிவன் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லலாம். குடும்பத்தில் வீண் சண்டையோ சச்சரவுகளோ ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் முகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் செய்யும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பல மடங்கு பெருகும்.

காயத்ரி மந்திரம்:

ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்

நாம் வீட்டில் பூஜையறையில் அமர்ந்து தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தையும், மூல மந்திரத்தையும் சொல்லி கடவுளை வணங்கினால் வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கி சுபிட்சமும், ஐஸ்வரியமும் குடிகொள்ளும். என்று கூறுகிறது ஐதீகம்.