நடிகர் விஜய் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய செல்வாக்கில் உள்ளார். இவரின் திருமண கொண்டாட்டம் சம்பந்தமான ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.கண்ணுக்குள் நிலவு படப்பிடிப்பு தளத்தில் விஜய் – சங்கீதா தம்பதியினரின் மாலை அணிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி இவர்களது திருமணம் 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி விஜய் – சங்கீதா தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.
விஜய் – சங்கீதா தம்பதியின் திருமண நாள் , கண்ணுக்குள் நிலவு பட ஷெட்டில் நடந்த திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு அனைவரது கவனம் பெற்று வருகிறது.
அந்த புகைப்படத்தில் விஜய் – சங்கீதா இருவரும் மாலை அணிந்திருக்கின்றனர். அவர்களுடன் இயக்குநர் ஃபாசில், நடிகை ஷாலினி, தாமு, சார்லி, உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கின்றனர்.