நிவர் புயலின் வேகத்தால் மின்சார கம்பியில் மாட்டிக் கொண்ட மரக்கிளையை ஊழியர் ஒருவர் அகற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கரையை கடந்தது.
இதனால் கனமழை பெய்ததால் புதுச்சேரியின் பெரும்பாலான தெருக்கள் வெள்ளக்காடானது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.புயல் காற்றில் ஏராளமான மரங்கள் சாய்ந்ததால், அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் உப்பளம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பியில் ஒயரின் மீது மரக்கிளையொன்று மாட்டிக்கொண்டிருந்தது.இதனை பார்த்த மின்துறை ஊழியர் ஒருவர், தன்னுடைய உ யிரையும் பணயம் வைத்து அதை அகற்றினார்.
இந்த காட்சிகள் வைரலாக, ஆ பத்தான நேரங்களில் பணியை மேற்கொண்ட மின்துறை ஊழியரை முதல்வர் நாராயணசாமி பாராட்டியுள்ளார்.