நடிகை ஸ்ரீதேவி போனி கபூரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்.. இதனால் பல வருடமாக கோ பத்தில் இருக்கும் போனிகபூரின் மகன் யார் தெரியுமா?

செய்திகள்

தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தை தயாரித்து கொண்டிருப்பவர் தான் போனி கபூர். இவர் ஏற்கெனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை எனும் படத்தையும் தயாரித்து வெளியிட்டார்.

அதுமட்டுமில்லாமல் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகல் 15 பட தமிழ் ரீமேக்கையும் தயாரிக்கிறார். ஹிந்தியில் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் போனி கபூர் அஜித்தை வைத்து தமிழ் சினிமாவிலும் அழுத்தமாகக் காலூன்றி விட்டார்.

போனி கபூர் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அதற்கு முன்னரே மோனா கௌரி என்பவரை திருமணம் செய்திருந்தார். அந்த தம்பதியினருக்கு அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என்ற மகளும் இருந்தனர்.

ஸ்ரீதேவி நடிக்கும் படங்களை தயாரித்த போது இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் இருவரும் திருமணம் செய்து கொண்ட அவருடைய முன்னாள் மனைவியை ஈவு இ ரக்கம் இல்லாமல் விவாகரத்து செய்து அனுப்பி விட்டதாக அவர் மீது பல வருடமாக கோ பத்தில் இருந்தார் அர்ஜுன் கபூர்.

தன் அப்பாவை ஏ மாற்றி திருமணம் செய்து கொண்டார் என்கிற கோபம் அர்ஜுன் கபூரிடம் அதிகமாக இருந்ததால் அவரிடம் பேசவே ப யப்படுவாராம் ஸ்ரீதேவி. ஆனால் ஸ்ரீதேவி இ றந்த பிறகு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரையும் சொந்த தங்கைகளை போல பராமரித்து வருகிறார்.

அதற்கு காரணம் தன்னுடைய அம்மாவின் வளர்ப்பு தான் எனக்கூறி அப்பாவின் வளர்ப்பு சரியில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் போனிகபூர் சற்று அப்செட்டில் உள்ளாராம். அர்ஜுன் கபூர் பாலிவுட் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.