நடிகை லட்சுமியை நியாபகம் இருக்கா? வயதாகி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. அவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

செய்திகள்

தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் முண்ணனி நடிகையாக வலம் வந்த லட்சுமி இப்போது 67 வயதில் முடியெல்லாம் நரைத்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த லட்சுமி, இப்படி ஆகிட்டார் என வேதனையோடு பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘இயக்குனர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்பவர் நடிகை லட்சுமி. யரகுடிபாடி வரதராவ், ருக்மணி தம்பதியினரின் மகளான லட்சுமி, 1968ல் வெளியான ஜீவனாம்சம் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இவரது பெற்றோரும் சினிமாத் துறை பிண்ணனி கொண்டவர்கள் தான்.

ருக்மணி தமிழ்ப்படங்களில் நடிக்கவும், வரதராவ் சமூக அக்கறைக் கொண்ட படங்களை தயாரிக்கவும் செய்திருந்தார். 1977ல் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்ததற்காக லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தொடர்ந்து முதன்மைப் பாத்திர வாய்ப்பு இழந்து துணைப் பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார்.

இதுவரை 400 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் லெட்சுமி, ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்தார். அது செம ஹிட்டானது. சின்னத் திரையில் தமிழில் அச்சமில்லை அச்சமில்லை என்னும் அரட்டைத் தொடரையும் நடத்தினார். அதே போல் கன்னடத்தில் அது கதே அல ஜீவனா என்னும் அரட்டைத் தொடரை நடத்தி வருகிறார்.

லெட்சுமிக்கு இப்போது 67 வ யது ஆகிறது. அவரது முடியெல்லாம் ந ரைத்த  தோ ற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்ப்பவர்கள் நடிகை லெட்சுமியா இது என ஆ ச்சர்யத்தில் மூ ழ்கிப் போயுள்ளனர்.