நடிகை ராதா வீட்டில் நடந்த விஷேசம்! அவரது மகள் கார்த்திகாவா இது நமபவே முடியல.. தீயாய் பரவும் புகைப்படம்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் 90’ஸ் கால கட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில், பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

நடிகை ராதா கடந்த 1996ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான கார்த்திகா கடந்த 2009ஆம் ஆண்டு  வெளிவந்த ஜோஷ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து கார்த்திகா அன்னக்கொடி, புறம்போக்கு, வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி படங்களிலும் நடித்த அவருக்கு தற்போது சரியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

இந்நிலையில் நடிகை கார்த்திகா அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்பொழுது தனது அம்மா ராதா மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.