நடிகை நயன்தாரா முதன் முதலாக இந்த படத்தில் தான்நடித்துள்ளாராம்..!!

செய்திகள்

நயன்தாரா தென்னிந்திய சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகை. மலையாளத்தில் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர் தமிழில் ஐயா படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

பின் தெலுங்கு, மலையாள சினிமாவிலும் டாப் நடிகையாக வலம் வந்தார். நடுவில் சொந்த பிரச்சனையால் சினிமா பக்கம் வராமல் இருந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார்.

அண்மையில் பாலிவுட்டின் டாப் நாயகி கத்ரீனா கைப்பின் ஒரு போட்டோ ஷுட்டில் நயன்தாராவும் கலந்து கொண்டிருந்தார்.

நாம் இதுவரை நினைக்கிறோம் நயன்தாரா ஐயா படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் என்று, ஆனால் உண்மையில் அப்படம் முதல் படம் கிடையாது.

 

பார்த்திபன் அவர்கள் இயக்கிய பச்சக் குதிர படம் தான் நயன்தாரா நடித்த முதல் படமாம். அதில் நடித்தும் இருக்கிறார் ஆனால் சில பிரச்சனைகளால் அதில் இருந்து வெளியேறியிருக்கிறார்.