நடிகை நயன்தாரா ஒரே ஒரு படத்தால் பல கோடி சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.. அது எந்த படம் தெரியுமா?

செய்திகள்

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் கடந்த 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. இவரின் பிறந்தநாள் இன்று என்பதினால், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இவர் நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

மேலும் நயன்தாராவின் நடிப்பில் தீபாவளி அன்று மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை பல கோடி உயர்த்தியுள்ளாராம் நடிகை நயன்தாரா.

அதுமட்டுமின்றி இவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு முன்பு ரூ. 3 – 5 கோடி வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ. 10 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.