நடிகை தன்யாவின் தாத்தா இவ்ளோ பெரிய நடிகரா? அட இவரா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே!! யாருன்னு நீங்களே பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழ் திரையுலகில் பணியாற்றிய இந்திய நடிகை. 2016ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். அப்போது அவர் பெயர் அபிராமி என்று அழைக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

தற்போது அபிராமி என்ற பெயரை மாறி தன்யா என்று வைத்துக் கொண்டார். அதன் பிறகு நடிகை தன்யா சசிகுமாருடன் பலே வெள்ளைய தேவா, பிருந்தா வனம், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கருப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நேரத்தில் இவர் யார் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நடிகை தன்யா பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியாம். நடிகர் ரவிசந்திரனின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம்.

இவரது இளமைக் காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது. மேலும் நடிகர் ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம் பூர் தமிழ் சங்கம் நட த்திய பள்ளியில் படித்தார்.

மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன். பின் மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார்.இவர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்.

சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்த போது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். அதன் மூலம் 1964ம் ஆண்டு ‘கா தலிக்க நேரமில்லை‘ படத்தின் கதாநாயகனானார் இவர்.