நடிகை கௌதமியின் முதல் கணவர் இவர்தானா! இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!! வைரலாகும் திருமண புகைப்படம்!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி. பின்னர் அவர் அகமலுடன் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து கவுதமி ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கௌதமி சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து 1998-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். இந்த தம்பதியினருக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் 2005ஆம் ஆண்டு முதல் நடிகர் கமலுடன் கிட்டதட்ட பத்து வருடங்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். பின்னர்  தனது மகளின் எதிர்காலம் கருதி கடந்த ஆண்டு கமலை விட்டு பிரிந்தார்.  நடிகை கௌதமி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இந்நிலையில் தற்போது கௌதமியின் முதல் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.  அந்த புகைப்படத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் உடன் உள்ளார்.