நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்தவுடன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.. அதுவும் முன்னணி நடிகருடன் யார் தெரியுமா?

வைரல் வீடீயோஸ்

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், தமிழில் கடைசியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகை காஜல் அகர்வாலுக்கும் கவுதம் கிட்ச்லு என்பவருக்கும் நேற்று மும்பையில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தீயாய் பரவி வந்தது.

இதனிடையே நடிகை காஜல் அகர்வால் தனது திருமணத்தை முடித்த கையோடு, ஹே சினமிகா திரைப்படத்தின் படப்பிடிப்பில் நவம்பர் 10 தேதி முதல் கலந்து கொள்கிறாராம்.

இப்படத்தில் அவருடன் துல்கர் சல்மான், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை நடனமைப்பாளர் பிருந்தா மாஸ்டர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.