நடிகை கயல் ஆனந்திக்கு திருமணம்! முடிந்தது.. அட மாப்பிள்ளை இவர் தானா.. இணையத்தில் வைரலாகும் அழகிய திருமண ஜோடியின் புகைப்படம்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. அந்தப் படத்துக்குப் பிறகு இவரை பலரும் கயல் ஆனந்தி என்றே அவரை அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து சண்டி வீ ரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ‘விசாரணை, ரூபாய், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது தமிழில் அலாவுதீனின் அற்புத கேமரா, ‘ஏஞ்சல், உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஆனந்தி. இந்நிலையில் நேற்று  இணை இயக்குனரான சாக்ரடீஸ் என்பவருடன் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட  இந்த திருமணம் தெலங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் இரவு 8 மணியளவில் நடைபெற்றது. கொ ரோனா  காரணமாக நெருங்கிய திரையுலக நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மணமகன் சாக்ரடீஸ் மூடர் கூடம் நவீனின் மைத்துனர் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா, அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதோ அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.