தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை அசின். சூர்யாவோடு அசின் நடித்த கஜினி திரைப்படம் அவரை பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது.
கடந்த 2001ல் ‘நரேந்திரன் மக்கள் ஜெயகாந்தன் வக்கா’ என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாத் துறைக்குள் வந்த அசின், கடந்த 2003ல் வெளியான ஜெயம்ரவியின் ‘குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். அஜித்துடன் ஆழ்வார், விஜயுடன் காவலன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஹீரோயினாக வலம் வந்தவர். பாலிவுட் பக்கம் ஒதுங்கியவரால் அங்கு பெரிதாக வெற்றி பெற முடியவில்லை.
கடந்த 2016ல் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டு சினிமா இண்டஸ்ட்ரிக்கு பிரேக் ் விட்டார் நடிகை அசின். இப்போது நடிகை அசினுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்துக்கு பின்னர் லைம்லைட்டுக்கு அப்பால் போய்விட்டார் அசின்.
வரலாறு, தசாவதாரம், கஜினி, போக்கிரி, சிவகாசி என இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடித்தது. அசின் என்றால் அழகு என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அசின் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இருந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைமுடி குலைந்த நிலையில் அப்பாவியாக இருக்கும் அவரது புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அடடே அசினா இது என ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.