நடிகர் விஷால் தனது முன்னாள் காதலியுடனான திருமணத்தை நிறுத்தியதற்கு இது தான் காரணம்! என்று உண்மையை உடைத்த நடிகர் விஷால்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். செல்லமே படத்தின் மூலம் ஆரம்பித்து தற்போது சக்ரா படம் வரை வெற்றி தோல்விகளை கொடுத்து வந்தார். இதையடுத்து, நடிகர் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் எப்போது திருமணம் என்ற கேள்விகள் பல ஆண்டுகளாக விஷாலிடம் கேட்டு வந்தது. காதலில் விழுந்த நடிகர் விஷால் அனிஷா ரெட்டி என்பவரை காதலித்து விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவித சத்தமும் இல்லாமல் இருவரும் பி ரிந்து விட்டனர்.

இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், அனிஷாவிற்கு சில தினங்களுக்கு முன்னர் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனிடையே தற்போது தன்னுடைய திருமணம் நின்று போனதற்கான காரணம் என்ன என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

அதில் என்னுடைய திருமண விஷயத்தில் சில விஷயங்கள் கை மீறிச் சென்று விட்டன. தற்போதைக்கு நான் சிங்கிள் தான் மிங்கிளாக ரெடி என தெரிவித்துள்ளார்.