நடிகர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம்! மாப்பிள்ளை இவர் தான்.. புகைப்படம் இதோ..!!

செய்திகள்

நடிகர் விஷாலின் முன்னாள் காதலியான அனிஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்த அனிஷா அல்லா ரெட்டியும், விஷாலும் காதலித்து வந்தனர். மேலும் இதையடுத்து இவர்கள் இருவருக்கும்  ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமணத்திற்கு தேதி எல்லாம் குறித்தார்கள். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த வேகத்தில் திருமணம் நின்றதாக தகவல் வெளியானது. விஷாலுக்கும், அனிஷாவுக்கும் இடையே க ருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் நின்று விட்டது.

மேலும் இந்நிலையில் அனிஷாவுக்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமண தேதியை முடிவு செய்துள்ளார்களாம்.  அனிஷாவுக்கு விரைவில் திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அனிஷாவை பிரிந்த பிறகு விஷால் தன் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.