நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபல நடிகர்..!! அவர் கொடுத்த நிதியுதவியை அவரது தாய் வாங்க மறுத்தார்.. காரணம் இதோ….!!

வைரல் வீடீயோஸ்

பிரபல நடிகர் விஜய் சேதுபதி வடிவேல் பாலாஜி தாயாரிடம் நிதியுதவி அளித்த போது அவரின் தாய் கூறிய வார்த்தையால் விஜய் சேதுபதி பேசமுடியாமல் திகைத்து நின்றார். நகைச்சுவை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி நேற்று காலை அவர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அந்த புகைப்படங்கள் நேற்று வெளியாகியது. இந்நிலையில் அப்போது வடிவேல் பாலாஜியின் தாயார் பேசிய விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

விஜய் சேதுபதி அவர் தாயிடம் ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் நிதியுதவியும் அளித்தார். அப்போது அதனை பெற மறுத்த வடிவேல் பாலாஜியின் தாய் இந்த காசு என் பையனுக்கு ஈடாகுமாய்யா என்று கதறினார். அப்போது மகனை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.

விஜய் சேதுபதியிடம் வடிவேல் பாலாஜியின் தாய் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போய் நின்றார்.