தமிழ் திரையுலகில் வெளிவந்த ‘என் ராசாவின் மனசிலே’ எனும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் காமெடி நடிகர் வடிவேலு. மேலும் இதன் பின் இவர் சிங்கார வேலன், தேவர் மகன், பொண்ணுமணி, ராஜகுமாரன் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
அதுமட்டுமின்றி இவர் கதாநாயகனாக 23ஆம் புலிகேசி, தெனாலி ராமன், எலி ஆகிய படங்களில் நடித்து நம்மை மகிழ்வித்தார். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாபெரும் படம் தளபதி விஜய் நடித்து வெளிவந்த மெர்சல்.
காமெடி நடிகர் வடிவேலு திரையுலகில் தற்போது படங்கள் நடிக்கவில்லை என்றாலும், மீம் கிரியேட்டர் மூலமாக திரையுலகில் இருந்து அளிக்கவே முடியாத அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் மகனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் அட இவர் வடிவேலுவின் மகனா என்று ஆச்சரியப்படுகின்றன.
ஏனென்றால் அவரது மகன் அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கிறார் என கூறுகின்றன.