நடிகர் மாதவன் பிரபல மாஸ் ஹீரோவுக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.. ஹீரோ யார் தெரியுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் மாதவன். அதனை தொடர்ந்து சாக்லேட் பாயாக வலம்வந்த அவர் மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், தம்பி, ரெண்டு, ஆர்யா, யாவரும் நலம் மற்றும் இறுதிச்சுற்று உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார்.

மேலும் அனுஷ்காவுடன் இணைந்து இவர் நடித்துள்ள சைலென்ஸ் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. நடிகர் மாதவன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் பலரும் வில்லனாக நடித்து வரும் நிலையில், தற்போது நடிகர் மாதவனும் வில்லனாக களமிறங்கியுள்ளார்.

அதாவது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் மாதவனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது. மேலும் மாதவன் ஏற்கனவே நடிகர் நாகசைதன்யாவின் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.