நடிகர் பிரபு தேவா திருமணம் செய்தது உண்மை தானா? அவரது சகோதரர் ராஜு சுந்தரம் கொடுத்த பேட்டி இதோ..!!

செய்திகள்

பிரபுதேவா திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்று அவரது சகோதரர் ராஜூ சுந்தரம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக பிரபுதேவாவிற்கு திருமணம் முடிந்தது என்று தகவல் வெளியாகி கு ழப்பத்தினை ஏற்படுத்தியது.

தற்போது பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ஹிமானி என்பவரை திருமணம் செய்தது உறுதியாகியுள்ளது. முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் இருக்கும் பிரபுதேவா பல சர்ச்சைகளில் சிக்கினார். இவர் 1995ம் ஆண்டு ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு, இவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் விஷால் தனது 12 வயதில் மரணமடைந்தார்.

பின்பு மனைவியை பிரிந்த பிரபுதேவா, நயன்தாராவை காதலித்து அவரை திருமணம் செய்வதற்கு தயாரானார். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக, கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. ஆனால், கல்யாணம் வரை சென்ற இந்த காதல், பிறகு முறிந்தது. 2012-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், பிரபுதேவா பிசியோதெரபி டாக்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. மும்பையில், பிரபுதேவா நடனம் ஆடியதால் கால் மற்றும் இடுப்பில் பி ரச்சனை ஏற்பட்டதாகவும் அவருக்கு பிசியோதெரபி செய்ய வந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து சென்னையில், கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. மணப்பெண் பெயர் டாக்டர் ஹிமானி. மும்பை சாக்கி நாக்கா பகுதியில் வசித்து வந்தவர். திருமணத்துக்குப் பின்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொண்டது உண்மை தான் என்று பிரபுதேவாவின் சகோதரரும் நடன இயக்குனருமான ராஜூ சுந்தரம் உறுதிப்படுத்தி உள்ளார். ‘அது உண்மை தான். பிரபுதேவா திருமணம் செய்து கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி’ என்று அவர் கூறியுள்ளார்.