சூர்யா நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்திற்கு பின் சூர்யா தற்போது கௌதம் மேனன் நடிப்பில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் கூடிய விரைவில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக இளம் நடிகை ப்ரியா அருள் மோகன் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் மூலம் சூர்யாவுடன் முதன் முறையாக ஜோடியாக இணைகிறார் இளம் நடிகை ப்ரியா அருள் மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.