நடிகர் சூர்யாவின் பெரியப்பாவுக்கு அ ரிவாள் வெட்டு.. என்ன காரணம் தெரியுமா??

செய்திகள்

நடிகர் சூர்யாவின் பெரியப்பாவுக்கு அரி வாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சூலுார் நடராஜபுரத்தை சேர்ந்த குமாரசாமி(61) என்பவர் தனது மகன் அகிலேஷ் உடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். இருவரும் காரில் சென்றுக்கொண்டிருந்தப்போது எதிர்பாராதவிதமாக பைக்கில் வந்த ஒருவரின் மீது மோ தியது.

இது தொடர்பாக அகிலேஷ் மற்றும் பைக்கில் வந்த நபருக்கு இடையே த கராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் த கராறு முற்றி கைக லப்பு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பைக்கில் வந்த நபர் அருகில் இருந்த வீட்டிலிருந்து அரி வாளை எடுத்து வந்து குமாரசாமி மற்றும் அவரது உறவினர் குமரேசன் ஆகியோரை வெ ட்டினார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சூலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து அங்கு வந்த சூலுார் போலீசார் பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் சூலுார் ராமசாமி தேவர் வீதியை சேர்ந்த சதீஸ்குமார் (26) ஆட்டோ டிரைவர் எனத் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கா யமடைந்த குமாரசாமி நடிகர் சிவக்குமாரின் பெரியம்மா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு பெரியப்பா முறையாவார்.