நடிகர் சிவகார்த்திகேயன் அக்கா அம்மா யார் தெரியுமா?? இதுவரை பல பேருக்கு தெரியாத உண்மை!! அட இவங்க தான் அக்காவா!??

செய்திகள்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சகோதரியுடன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தங்களது வாழ்க்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டதாவது, என் அக்கா கெளரி, என் மீது ரொம்பப் பிரியம் கொண்டவர். பிளஸ்டூவில் அதிக மார்க வாங்கினார்.

அக்காவுக்கு டாக்டருக்குப் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது. பிளஸ்டூல நல்ல மார்க். ஆனா நுழைவுத்தேர்வுல ஒரு மூணுமார்க் கம்மியாயிருச்சு அக்காவுக்கு. அப்போ அப்பா கூப்பிட்டு, ‘பரவாயில்லம்ம்மா, கிட்டத்தட்ட 15 லட்சமாவும் போலருக்கு. இலவச சீட் இல்லாம, பணம் கட்டியே சீட் வாங்கிடலாம்னு சொன்னார்.

பணம் கடன் வாங்கியாச்சு. காலேஜுக்கும் போயாச்சு. இன்னும் ரெண்டு நிமிஷத்துல பணம் கட்டிடவேண்டியதுதான்.அப்பதான் அக்கா, டக்குன்னு அப்பாகிட்ட, ‘வேணாம்பா. எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க. திரும்பவும் எண்ட்ரன்ஸ் எழுதுறேன். இலவச சீட் வாங்கியே படிக்கீறேம்பா என்று சொல்லி, பணம் கட்டாமலே திரும்ப வைச்சாங்க அக்கா.

அதுக்கப்புறம் திரும்பவும் எண்ட்ரன்ஸ் எழுதினாங்க. சீட் கிடைச்சிச்சு. அதுக்கப்புறம் நடந்ததுதான் அ திர்ச்சி. அப்புறம் கொஞ்ச நாள்ல அப்பா உடம்புமுடியாம இ ற ந்துட்டாரு. அப்ப நானோ படிச்சிட்டிருக்கேன். அன்னிக்கி மட்டும் 15 லட்சம் செலவு பண்ணி, சீட் வாங்கியிருந்தா, அப்பா கடனை வைச்சிட்டுப் போயிட்டாருன்னு கலங்கியிருப்போம். அக்காவும் படிச்சிட்டிருக்கற சூழல். நானும் படிச்சிட்டிருக்கேன். குடும்பம் என்னாகியிருக்கும்?

அக்கா சாமர்த்தியமா அப்ப எடுத்த முடிவு, எங்க குடும்பத்தையே காப்பாத்துச்சு. அக்காவாவது சீட் வாங்கி, அப்பாவை இருக்கும் போது பெருமைப்படுத்திட்டாங்க. அக்காவுக்கு அக்காவா, அக்காவே அப்பாவா இருந்து என்னை வளர்த்ததால, அதுக்குப் பிறகு என் அப்பாவுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதையையும் கவுரவத்தையும் என் அக்காவுக்குக் கிடைக்கச் செஞ்சேன்.என் அக்கா, எனக்கு அப்பா மாதிரி என நெகிழ்ச்சி கொண்டார்.