நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை நடித்து முடித்துவிட்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிம்பு டி. ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தருக்கும் 1983ஆம் ஆண்டு குழந்தையாக பிறந்தார். நடிகர் சிம்புவும் பல பேட்டிகளில் தனது தாய் தான் எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவிற்கு அவரது தாயார் உஷா ராஜேந்தர் இன்ப அ திர்ச்சி ஒன்று கொடுத்துள்ளார். ஆம் நீண்ட நாளாக நடிகர் சிம்பு விருப்பப்பட்ட, மினி கூப்பர் எனும் காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு கொடுத்துள்ளார் உஷா ராஜேந்தர்.
இந்த காரின் இந்திய விலை ரூ. 40 லட்சம் என்று தெரிவிக்கின்றனர். இந்த காரில் தான் தற்போது ஊர் முழுவதும் அம்மா மகன் இருவரும் சுற்றி வருகின்றனராம்.