நடிகர் கமல் தனது இரண்டாவது மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிய இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

செய்திகள்

நடிகர் கமல் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவரின் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உண்டு.நடிப்பில் பல புது பரிமாணங்களை தமிழ் சினிமாவில் புகுத்தியவர்.தமிழ் சினிமாவை உலக அளவில் முன்னேற்றியவர்.

கடைசியாக இவர் நடிப்பில் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகியிருந்தது, அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போதுவரை இப்படம் குறித்த இந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் நடிகர் கமலின் தீவிர ரசிகர் என்பதால் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நேற்று நடிகர் கமலின் பிறந்தநாள் என்பதால் விக்ரம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு செம மாஸ்ஸாக நடிகர் கமலை காண்பித்துள்ளதால். இந்த டீசர் ரசிகர்களினிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் கமல் அவரின் இரண்டாவது மனைவியான சரிகாவுடன் அப்போது பிறந்தநாள் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.

அந்த புகைப்படம் இதோ..