நடிகர் அர்ஜூனின் மகள் பலரின் மனதை கொள்ளை கொண்ட பாடலுக்கு கண்ணை பறிக்கும் அளவிற்கு அழகான நடனம்! மகள் வெளியிட்ட வீடியோ..!!

செய்திகள்

சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் நடிப்பு துறையில் வருகை தந்து தங்களுக்கான புது வாழ்க்கை பயணத்தை தொடங்குவது அவ்வப்போது நிகழும் விசயமே. ஆனாலும் சிலர் மட்டுமே வேகமான வளர்ச்சியை எட்டுகிறார்கள். கன்னட சினிமாவை சேர்ந்தவர் என்றாலும் நடிகர் அர்ஜூன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து புகழ்பெற்று மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்.

சுதந்திர தினம் என்றால் இப்போதும் அவரின் ஜெய்ஹிந்த் படமும், தேர்தல் வந்தால் அவர் நடித்த முதல்வன் படமும் நினைவிற்கு வருவதோடு அதிகமாக டிவியிலும் ஒளிபரப்பப்படுகின்றன. அவரின் மகளான நடிகை ஐஸ்வர்யாவும் கடந்த 2013 ல் பட்டத்துயானை படம் மூலமாக ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அவரை 5 வருடங்களாக திரையில் பார்க்க முடியவில்லை. பின் சொல்லிவிடவா படத்திற்கு பின் நடிக்கவுமில்லை. இதனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. சமூக வலைதளங்களில் மட்டுமே ஐஸ்வர்யா ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

அர்ஜூன் நடிப்பில் மறக்க முடியாத படங்களில் ஒன்றான ரிதம் படத்தின் காற்றே என் வாசல் வந்தாய் பாடல் இசைக்கு தற்போது ஐஸ்வர்யா நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அழகான அவர் நடனமாடும் அந்த வீடியோ இதோ..