நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு 2 மகன்களா? அவர்கள் யார் தெரியுமா? என்ன வேலை செய்யுறாங்க தெரியுமா? இதோ நீங்களே பாருங்க..!!

செய்திகள்

80,90 களில் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர் செந்தில். இவரை திரையில் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். நடிகர் செந்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான முதுகுளத்தூரில் ராமமூர்த்தி- திருக்கமால் என்ற தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தன்னுடைய 13 வது வயதில் தனது தந்தை திட்டியதற்காக ஊரை விட்டு ஓடிவந்து விட்டார்.

அதன் பிறகு என்னை கிடங்கில், மது விற்கும் கடையில் வேலை பார்த்து வந்தார்.அதன் பிறகு நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1979 ல் “ஒரு கோயில் ஒரு தீபம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு 1980 ல் இவர் நடிப்பில் வெளிவந்த “மலையூர் மம்பட்டியான் “படத்தின் மூலம் பிரபலம் ஆனார். தொடந்து 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த அனைத்து படங்களின் நகைச்சுவை காட்சிகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் சிரிப்பு வரும். தற்போது நடிகர் செந்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி சீரியலில் நடித்து வருகிறார்.

செந்தில், கலைச்செல்வி என்பவரை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மணிகண்டபிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார். பெரிய மகன் ஒரு சிறந்த பல் மருத்துவர், இளைய மகன் சினிமோட்டோகிராபி படித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் செந்திலின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்