தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகர் ரியோ ராஜ் முதன்முதலாக தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..!!

செய்திகள்

சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று தமிழ்நாட்டு மக்கள் அறியும்படி வளர்ந்திருப்பவர் ரியோ ராஜ். முதன்முதலாக பிரபல பாடல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கினார்.

அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதில் பணிபுரியும் போதே ஸ்ருதி என்பவரை காதலித்து வந்துள்ளார்.

பின் சரவணன்-மீனாட்சி என்ற மெகா ஹிட் சீரியலில் நாயகனாக நடித்து வந்தார். அதனிடையில் தனது நீண்டநாள் காதலியை திருமணமும் செய்து கொண்டார்.

இப்போது படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்துவரும் ரியோ ராஜிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதுநாள் வரை குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாத அவர் தற்போது தனது மனைவி, குழந்தைகள் என சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.