தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா..? எப்படி… எதனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்…!!

உணவே மருந்து

சிலருக்கு உடல் எடையை குறைப்பது தான் மிக பெரிய பிரச்சனை பட்டையில் தேனை சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் செரிமானம் சீராக நடைபெறும். அதுமட்டுமின்றி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து அதன்  மூலமாக கொழுப்புக்கள் கரைகிறது.

உடல் எடையை குறைக்க உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேனை ஒன்றாக நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். திரிபலா என்பது ஒரு ஆயுர்வேத மருந்து. இவை செரிமானத்தை மேம்படுத்தி கழிவுகளை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்கிறது.

மேலும் 1 ஸ்பூன் திரிபலாவை நீரில் இரவு முழுவதும் நன்கு ஊறவைத்து அடுத்த நாள் காலையில் அதில் தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலனை அளிக்கிறது. வேப்பம் பூவை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

உடல் எடையை குறைப்பதற்கு சிறிதளவு வேப்பம்பூவை தட்டி அதில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி  ரோஜாப்பூவின் இதழை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை விரைவில் குறையும்.

 

ரோஜாப்பூ இதழை நீரில் கொதிக்க  வைத்து அந்த நீரை வடிகட்டி, அதில் தேன் சேர்த்து தினமும் ஒருமுறை குடித்து வந்தால் உடலுக்கி மிக நல்லது. அப்படி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். மேலும் நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

மேலும் இது போன்ற இயற்கை சார்ந்த பானங்களை எடுத்துக் கொள்வதால் உடல் எடை எந்த விதமான பாதிப்புகள் இல்லாமல் விரைவில் குறைந்து விடும். அதுமட்டுமின்றி இவை செரிமானத்தை மேம்படுத்துகிறது.