தேனிசைத்தென்றல் தேவாவுடன்,தளபதி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தல..!! இணையத்தில் வைரலாகும் அரிய மாஸ் புகைப்படம்!!

செய்திகள்

நம் தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருக்குமே நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவர்.

மேலும் தல குறித்தும், தளபதி குறித்து ஏதேனும் சிறு தகவல்கள் வெளிவந்தாலும் அதனை பெருமளவில் ட்ரெண்டாக்குவர். மேலும் இருவரது ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது சமூகவலைதளங்களில் வாக்குவாதங்கள் எழுந்து, சர்ச்சைகளும் உருவாகும்.

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான திரைப்படம் குஷி. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தல அஜித்தும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார். இவ்வாறு தல தளபதி இருவரும் ஒன்றாக இருக்கும் இந்த அரிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.