தீவிர மருத்துவ கண்காணிப்பில் நடிகர் சரத்குமார்! மனைவி ராதிகா வெளியிட்ட ஷாக் தகவல்! வருத்தத்தில் ரசிகர்கள்!

செய்திகள்

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அத்தகைய கொடிய வைரஸ் தொற்று  இந்தியாவிலும் பரவி அதனால் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், மருத்துவ ஊழியர்களும், அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமானோர் உயிரிழக்கும் துயரமும் நேர்ந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். நடிகர் சரத்குமார் வெப்சீரிஸ் ஒன்றில்  நடிப்பதற்காக ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் சரத்குமார் உள்ளார். வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.