தி டீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தளபதி விஜய் சந்திப்பு..!! என்ன காரணம் தெரியுமா?

செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு, மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் கொரோனா ஊ ரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில் தற்போது தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எ திர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே மாஸ்டர் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேற்று சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தியேட்டரில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூறு சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு அவர் கோ ரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.