மேய்வதற்காக வயல்வெளியில் சுற்றித் திரிந்த ஆட்டுக்குட்டி ஒன்று மூடாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனை அறிந்த ஆடு மேய்க்கும் இளைஞர்கள் துரித நடவடிக்கையாக அதனை எந்த விதமான இயந்திரங்களும் இல்லாமல், சில இளைஞர்கள் கூடி புத்திசாலித்தனமாக மீட்டுள்ளனர்.அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவமானது அசாம் மாநிலம் காவல்துறை கூடுதல் பணிப்பாளர் ஜெனரல் ஹர்தி சிங் இந்த வீடியோவை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.இந்தியர்கள் பாணியில் மீட்கப்பட்டுள்ளது. உறுதியான மனநிலை, கூட்டான வேலை மற்றும் தைரியம் என்று பதிவிட்டுள்ளார் இது மற்ற இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருப்பதற்காக கூட பதிவிட்டுருக்கலாம்.
அந்த வீடியோ பதிவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்க ஒரு இளைஞரை தலைகீழாகக் குழிக்குள் அனுப்புகின்றனர். உள்ளே செல்லும் இளைஞரின் காலை இருவர் பிடித்துக் கொள்கின்றனர்.அவர் தொங்கியபடி உள்ளே சென்று ஆட்டை பிடித்ததும் சரசரவென்று இளைஞரை மேலே இ ழுக்கின்றனர். ஆடு அவருடன் வெளியே வந்து துள்ளிக் குத்து ஓடுகிறது.
இதுவரை இந்த வீடியோ பல லட்சம் பார்வைகளை ஈர்த்துள்ளது. பலரும் இந்த இளைஞர்களின் செயல் புத்திசாலித்தனம், என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Desi style rescue! Grit, determination, team work n courage. 😊👏🏼👍🏻
Pls see till the end. pic.twitter.com/yencb5M5jS— Hardi Singh (@HardiSpeaks) June 27, 2020